Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்கள்.. ஷங்கர் போட்ட ஸ்கெட்ச்

vinoth
புதன், 1 மே 2024 (07:53 IST)
கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல பிரச்சனைகளைக் கடந்து இப்போதுதான் ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மே மாதமே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி மே 16 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரண் தேஜாவும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ராம் சரண் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments