Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர் மட்டும் இருந்தால் இந்தியா உலகக்கோப்பையை வென்றிருக்கும் – ரெய்னா சொல்லும் வீரர் யார்?

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (16:35 IST)
அம்பாத்தி ராயுடு மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றிருந்தால் இந்தியா உலகக்கோப்பையை வென்றிருக்கும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் முதலில் அம்பாத்தி ராயுடு இடம் பிடிக்கவில்லை. ஆனால் ஸ்டான்பை வீரராக அவர் நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அணியில் இடம்பெற்றிருந்த விஜய் சங்கரின் முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் அம்பாத்தி ராயுடுவுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். அதனால் அதிருப்தியடைந்த அம்பாத்தி ராயுடு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ‘அம்பாத்தி ராயுடு நான்காவது இடத்துக்காக கடுமையாக உழைத்தார். ஆனால் அவருக்கு உலகக்கோப்பையில் இடம் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது. அவர் மட்டும் உலகக்கோப்பையில் இடம்பெற்றிருந்தால் இந்தியா கோப்பையை பெற்றிருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments