Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகுபலி, கபாலி வரிசையில் இடம் பிடித்த விஜய் 60

பாகுபலி, கபாலி வரிசையில் இடம் பிடித்த விஜய் 60
, புதன், 24 ஆகஸ்ட் 2016 (18:25 IST)
இயக்குநர் பரதன் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கீர்த்தி சுரேஷ், சதீஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வரும் இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.


 
 
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே 'எங்க வீட்டு பிள்ளை' என்று தலைப்பிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இத்தலைப்புக்கு ஒரு தரப்பினர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தார்கள்.
 
இந்நிலையில் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் 60' படத்துக்கு 'எங்கள் வீட்டு பிள்ளை' என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவி வருகிறது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர்.
 
இப்படத்துக்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்திருந்தனர்.
 
இதனை தொடர்ந்து, செப்டம்பரில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தெரிகிறது. பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் வியாபாரமும் இப்போதே தொடங்கிவிட்டது. முதற்கட்டமாக இப்படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை IFAR என்ற நிறுவனம் ரூ.6.25 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
விஜய் படங்களிலேயே கேரளா உரிமை இவ்வளவு தொகைக்கு விற்பனையானது இந்த படத்துக்குத்தான். 
 
அதுமட்டுமில்லாமல், பிரம்மாண்டமாய் வெளிவந்த ‘பாகுபலி’, ‘கபாலி’ ஆகிய படங்களை அடுத்து கேரளாவில் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘பாகுபலி’ படம் ரூ.10.5 கோடிக்கும், ‘கபாலி’ படம் ரூ.7.5 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் ஆர்யா