Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாலிவுட் படத்தில் யுவன்

ஹாலிவுட் படத்தில் யுவன்
, சனி, 27 ஆகஸ்ட் 2016 (15:37 IST)
ஹாலிவுட்டில் தயாராகும் வுல்பெல் என்ற சயின்ஸ் பிக்ஷன் அனிமேஷன் படத்துக்கு யுவன் இசையமைப்பதாக சென்ற வருடம் கூறப்பட்டது.


 


சுமார் 15 படங்களுக்கு இசையமைத்துவரும் அவர், ஹாலிவுட் படம் எதற்கும் இசையமைப்பது போல் இல்லை. சென்ற வருடம் சொன்ன ஹாலிவுட் வாய்ப்பு தள்ளிப் போனதா இல்லை கை நழுவிப் போனதா? 
 
விசாரித்ததில் கைநழுவிப் போகவில்லை, தள்ளித்தான் போயுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. 
 
அனிமேஷன் படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது. அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு யாரை பேச வைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. அது முடிவானதும் படவேலைகள் முழுவீச்சில் ஆரம்பமாக உள்ளது. யுவன் இசையமைக்கிறார். 
 
இந்த ஆரம்பகட்ட பணிகள் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என படம் சம்பந்தப்பட்டவர்கள் கூறியுள்ளனர். கூடுதல் தகவல், இந்தப் படத்துக்கு எடிட்டிங் செய்பவர், தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரவீன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்வினி அய்யரின் புதிய படம் பார்லி கி பார்லி