Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷிடம் ரஜினிக்கு பிடித்த விஷயம் இதுதான்!!

தனுஷிடம் ரஜினிக்கு பிடித்த விஷயம் இதுதான்!!
, சனி, 17 டிசம்பர் 2016 (14:59 IST)
ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய ஸ்டாண்டிங் ஆன் என் ஆப்பிள் பாக்ஸ் புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. விழாவில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை சோனாக்ஷி சின்ஹா, அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, என் தந்தையின் நடிப்பை விமர்சிக்கும் விமர்சகர்களில் நானும் ஒருத்தி. அப்பா இந்த படம் கொஞ்சம் ஓவர் என்று கடுமையாக இல்லாமல் அமைதியாக ஞாபகப்படுத்தி கொண்டே இருப்பேன்.
 
என் கணவர் தனுஷும், அப்பாவும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளனர். சிறுவயதில் இருந்தே தனுஷ் என் தந்தையின் ரசிகர். இன்னாரின் மருமகன் என்று இல்லாமல் தனுஷ் தன் முயற்சியால் பெரிய ஆளானது என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும்.
 
மேலும் என் மகன்களை விஞ்ஞானிகளாக்கிப் பார்க்க விரும்புகிறேன். நான் சிறு வயதில் இருந்தே சினிமா பட இயக்குனராக வேண்டும் என விரும்பினேன். சமூக வலைதளங்களில் என் தந்தை பற்றி வரும் ஜோக்குகளை பார்த்து அவர் ரசித்து சிரிப்பார் என்று கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை பாவனாக்கு திருமணம்; மாப்பிள்ளை யார் என்பது சீக்ரெட்!!