Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ''அயலான் ''பட முக்கிய அப்டேட்

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (17:08 IST)
சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகிவரும்  அயலான் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.ரகுமான் இசையில் வேற லெவல் சகோ என்ற பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது.

இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது  வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments