Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்ட விரோதமாக என்னுடைய பாடல்களை விற்கிறார்கள் - இளையராஜா புகார்

Webdunia
திங்கள், 8 டிசம்பர் 2014 (09:29 IST)
இளையராஜாவின் இசை ஓர் அமுதசுரபி. அதனை ஆளுக்கு தகுந்தாற்போல் கூறு போட்டு விற்கிறார்கள். இளையராஜாவின் பாடல்களை காப்பியடித்து இசையமைக்கப்பட்ட இந்திய சினிமா பாடல்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் இருக்கும். இதுதவிர தொலைக்காட்சிகள். 



 
இளையராஜாவின் இசை துணுக்குகளைதான் தங்களின் நிகழ்ச்சிக்கு அடையாளமாக தொலைக்காட்சிகள் பயன்படுத்துகின்றன. உதாரணமாக பாடல்களை மட்டும் ஒளிபரப்பு சானல்களில் ஒவ்வொரு நிகழ்ச்சியின் டைட்டில் இசையும் இளையராஜாவினுடையது. ராயல்டி தராமலே வருடக்கணக்கில் இந்த திருட்டு நடந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
 
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
நான் தியாகராயநகர் முருகேசன் தெருவில் வசித்து வருகிறேன். நான் தமிழ் திரைப்பட உலகில் கடந்த 40 ஆண்டுகளாக இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். 
 
நான் இசையமைத்து பதிவு செய்கின்ற பாடல்களை எனது அனுமதியின்றி வேறு எந்த நிறுவனங்களுக்கும், சி.டி.க்களாகவோ, இதர பதிவுகளாகவோ வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளேன். அது இன்றளவும் நடைமுறையில் உள்ளது. 
 
பி.நரசிம்மன், அகி மியூசிக் பிரைவேட் லிமிடெட் அகிலன் லட்சுமண் கிரி டிரேடிங் கம்பெனி, அபிஷேக் ரங்கநாதன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் கடைகளிலும், இணையதளங்கள் மூலமாகவும் பாடல் பதிவுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
 
மலேசியாவிலிருந்து இந்தியா வந்து தங்கி இருந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மேற்கண்ட அகிலன் லட்சுமண் மற்றும் அவருக்கு உறுதுணையாக மேற்கண்ட மற்ற நபர்களும் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களது நடவடிக்கைகள் மூலம் எனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி வருகிறார்கள். 
 
இது சம்பந்தமாக மேற்கண்ட நபர்கள் மீது கடந்த 22.5.2014 அன்று எனது ரசிகர்கள் கிளப் மூலமாக தங்களிடம் புகார் அளித்தும் மேல் நடவடிக்கை இல்லை.
 
ஆகவே நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், எனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோதமாக எனது பாடல்களை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது சட்டப்படி தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments