Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கென்றே கடவுள் இதை எழுதியுள்ளார்.. ராமர் கோயில் குறித்து இளையராஜா கருத்து!

vinoth
செவ்வாய், 23 ஜனவரி 2024 (08:04 IST)
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் பிராணண பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், பிரதமர் மோடி  பால ராமர் சிலைக்கு பூஜை செய்தார். அதன்பின்னர்,  உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆளுநர் ஆனதிபென் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பூஜை செய்து வழிபட்டனர்.

இந்த நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொனடனர். இந்நிலையில் சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற சென்னையில் அயோத்தி நிகழ்ச்சியில் கலந்துகொனட இளையராஜா ராமர் கோயிலைக் கட்டி முடிக்கும் பாக்கியத்தை கடவுள் மோடிக்கென்றே எழுதி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் “மோடியின் இந்த செயலை சொல்லும் போதே என் கண்ணில் நீர் வருகிறது. ராமர் கோயில் இந்தியா முழுவதுக்குமான கோயில். இன்றைய நாள் இந்திய சரித்திரத்தில் முக்கியமான நாள். ராமர் கோயில் மோடிக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தரும். அயோத்தியில் இருக்கவேண்டிய நான் இங்கே இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு ஆறுதலாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவர் இசைஞானி அல்ல, மெய்ஞானி.. இளையராஜாவுக்கு திருமாவளவன் புகழாரம்..!

’மூக்குத்தி அம்மன் 2’ பூஜை, படப்பிடிப்பு எப்போது? பரபரப்பு தகவல்..!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ‘வாவ்’ கிளிக்ஸ்!

தங்க நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… க்யூட் போட்டோஸ்!

சூரியை வைத்து வெப் சீரிஸ் இயக்கும் விக்ரம் சுகுமாரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments