Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவின் ஹிட் பாடலை ‘ரிக்ரியேட்’ செய்யும் யுவன் ஷங்கர் ராஜா!

vinoth
வெள்ளி, 10 ஜனவரி 2025 (07:04 IST)
தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜிப்ஸி என பன்முக கதாப்பாத்திரங்கள் கொண்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜீவா. தற்போது ஜீவா - ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கூட்டணியில் அகத்தியா என்ற படத்திஒல் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷன் தயாரிக்கும் இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார். இதில் ராஷி கண்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. அதை பார்க்கும்போது அது ஒரு பீரியட் பேண்டசி டிராமா கதைகளமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹாலிவுட்டில் வெளியான இண்டியானா ஜோன்ஸ் போன்ற பீரியட் சாகச படமாக ‘அகத்தியா’ உருவாகி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா  இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடலான “என் இனிய பொன்நிலாவே” பாடலை ரிக்ரியேட் செய்துள்ளார். அந்த பாடல் இன்று வெளியாகியுள்ளது. மூடுபனி படத்தில் இளையராஜா இசையில் உருவான அந்த பாடல் இன்றளவும் ரசிகர்களின் விருப்பப் பாடலாக உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments