இளையராஜா பயோபிக் படத்துக்கு இவர்தான் திரைக்கதை எழுதுகிறாரா?

vinoth
வெள்ளி, 29 மார்ச் 2024 (13:03 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். கமல்ஹாசன் திரைக்கதை எழுத உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த பட அறிவிப்பு கோடிக்கணக்கான இளையராஜா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் ஷூட்டிங்கை அக்டோபரில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தின் திரைக்கதையை எழுதுவார் என சொல்லப்பட்ட நிலையில் அவர் இப்போது தேர்தல் மற்றும் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் தனுஷே திரைக்கதையை எழுத உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments