Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் மட்டும் வேண்டாம், மற்றவர்கள் ஓகே! பிரபல நடிகர்

விஷால்
Webdunia
புதன், 15 மே 2019 (19:05 IST)
நடிகர் சங்க தேர்தலில் விஷால் மீண்டும் போட்டியிட்டால் அவரை எதிர்ப்போம் என்றும், அதே நேரத்தில் நாசர், கார்த்தி உள்பட வேறு யார் போட்டியிட்டாலும் அவர்களை எதிர்க்க மாட்டோம் என்றும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
நடிகர் சங்க தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மீண்டும் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த ஆர்.கே.சுரேஷ், 'விஷாலின் செயல்பாடுகள் சரியில்லை என்றும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலை தவிர வேறு யார் போட்டியிட்டாலும் எதிர்க்க மாட்டோம் என்றும், விஷால் போட்டியிட்டால் நிச்சயம் அவரை எதிர்ப்போம் என்றும் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார். ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' திரைப்படம் வெளிவரும்போது விஷாலுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் ஆர்.கே.சுரேஷ் இவ்வாறு அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் வரும் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார், ராதாரவி மீண்டும் போட்டியிடுவது சந்தேகமே என்பதால் இம்முறை பெரும்பாலான பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக நடிகர் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

ஏன் சாய் அபயங்கருக்கு இத்தனைப் பட வாய்ப்புகள் குவிகின்றன?.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு கணக்கு இருக்கா?

ஷாருக் கான் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்… ஷகீலா பகிர்ந்த தகவல்!

முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தனுஷின் 56வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments