Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் நடித்த காட்சிகளை கட் செய்தால் தற்கொலை செய்வேன் : நடிகர் சதீஷ் மிரட்டல்

நான் நடித்த காட்சிகளை கட் செய்தால் தற்கொலை செய்வேன் : நடிகர் சதீஷ் மிரட்டல்

நான் நடித்த காட்சிகளை கட் செய்தால் தற்கொலை செய்வேன் : நடிகர் சதீஷ் மிரட்டல்
, திங்கள், 26 செப்டம்பர் 2016 (15:33 IST)
வெளிவரவுள்ள திரைப்படத்தில் தான் நடித்திருந்த காட்சிகளை, எடிட்டர் கட் செய்தால், அவரின் வீட்டின் முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என்று காமெடி நடிகர் சதீஷ் மிரட்டியுள்ளார்.


 

 
காமெடி நடிகர் சதீஷ் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடித்துள்ள  ‘றெக்க’ படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்த படத்தின் எடிட்டர் பிரவீன் கே.எல்., படத்தின் நீளம் கருதி சதீஷ் நடித்திருந்த இரண்டு காட்சிகளை நீக்கிவிட்டாராம். 
 
இந்நிலையில், அப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய சதீஷ், இந்த படத்தில் நான் நடித்திருந்த 2 காட்சிகளை எடிட்டர் பிரவீன் நீக்கி விட்டார். நான் அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் ‘பைரவா’ படத்திற்கும் அவர்தான் எடிட்டர்.
 
எனவே, அப்படத்தில் நான் நடித்த காட்சிகளை அவர் நீக்கினால், அவரின் வீட்டு முன்பு சென்று தற்கொலை செய்து கொள்வேன் என நகைச்சுவையாக மிரட்டினார். இதனால், அந்த விழா கலகலப்புடன் சென்றது. பைரவா படத்தில் விஜய் கதாநாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடந்தவார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை