Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தந்தை பிச்சை எடுத்தார். நடிகர் விஷால் ஆவேசம்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (22:02 IST)
நடிகர் சங்க தேர்தலை அடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் களம் புகுந்துள்ள விஷால் அணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர்கள் கடந்த பத்து வருடங்களாக படமெடுக்க முடியாமல் பிச்சை எடுத்து கொண்டிருப்பதாகவும், இந்த நிலையை தங்கள் அணி வெற்றி பெற்றால் ஒரே வருடத்தில் மாற்றி காட்டும் என்றும், அவ்வாறு செய்ய முடியாவிட்டால் ராஜினாமா செய்ய தயார் என்றும் அறிவித்தார்




 


பத்திரிகையாளர்களிடையே விஷால் மேலும் கூறியதாவது:

நடிகர் சங்க தேர்தலின்போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். அடுத்த மாதம் நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்க இருக்கிறது.

நடிகர் சங்கத்தில் இருக்கிற நான் தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிட காரணம் என்னவென்று கேட்கிறார்கள். என்னுடைய அப்பா நிறைய படங்களை தயாரித்தார். நான் சிறுவனாக இருந்தபோது, தயாரிப்பாளர் சங்கத்திடம் தன்னுடைய படத்தை ரிலீஸ் பண்ணித் தருமாறு பிச்சை எடுத்தார். அதுதான் இன்று என்னை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட வைத்ததற்கு ஒரு
காரணம் என்றுகூட கூறலாம்.

என்னுடைய அப்பாவுக்கு நடந்தது இனிமேல் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்கக்கூடாது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அயராது பணியாற்றுவேன். தயாரிப்பாளர்கள் ஒவ்வொருக்கும் சொந்தமாக நிலம் வழங்குவேன்' இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்

இந்த சந்திப்பில் பிரகாஷ்ராஜ், மிஷ்கின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.,
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென 2டி நிறுவனத்தின் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்திய சூர்யா.. என்ன காரணம்?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஓப்பனிங் குத்து பாடல்.. ரிலீஸ் எப்போது?

அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் ஆகும் பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள்.. சூர்யாவுடன் மோதலா?

நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பினால்.. பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments