Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் விரும்பித்தான் படுக்கையை பகிர்ந்துள்ளேன்: ஷகிலா ஒபான் டாக்

நான் விரும்பித்தான் படுக்கையை பகிர்ந்துள்ளேன்: ஷகிலா ஒபான் டாக்
, திங்கள், 13 ஜூன் 2016 (16:04 IST)
பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலா என்றால் தெரியாதவரே இல்லை எனலாம். அந்த அளவுக்கு மிகவும் பிரபலமான நடிகை ஷகீலா. அவர் சமீபத்தில் தன்னுடையை சுயசரிதியை புத்தகமாக வெளியிட்டார்.


 
 
ஷகீலா தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் விவரித்துள்ளார். அதில் தான் 17 வயதில் சினிமாவில் நடிக்க வந்தேன், சினிமா வாய்ப்பு கேட்டு நான் யாரிடமும் செல்லவில்லை. சினிமா உலகம் என்னை தேடிவந்தது என்றார்.
 
செக்ஸ் படங்களில் நடித்தாலும், கவர்ச்சியாக நடித்தாலும், உடம்பை காட்டி நடித்தாலும் நான் சினிமாவுக்கு வந்த வழி சரியான வழி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பும் சினிமாவில் புகழ்பெற்ற பின்பும் என் வாழ்க்கையில் 'சில விஷயங்கள்' நடந்திருக்கின்றன. ஆனால், சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக நான் எங்கேயும் இரையாகவில்லை என்றார்.
 
எந்த இயக்குனரும் எந்த தயாரிப்பாளரும் என்னை அவர்களுடன் கூடப் படுக்க வேண்டுகோள் விடுத்ததில்லை. எந்த விதமான அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கும் உடன்பட நேர்ந்ததில்லை. இடைத்தரகர் மூலமாகவோ அல்லது வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளரிடமோ போயிருந்தால் படுக்கைக்கு அழைத்திருக்கும் சம்பவம் நடந்திருக்கலாம்.
 
என்னுடைய வாழ்க்கையில் நடந்த செக்ஸ் அனுபவங்கள் எல்லாம் என்னுடைய விருப்பத்தின் பேரிலும் என்னுடைய கிளர்ச்சியின் பேரிலும் மட்டுமே நிகழ்ந்தது தவிர சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக அல்ல என ஷகீலா தன்னுடைய சுயசரிதையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவியின் போகன் படங்கள்