Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் - மூத்த நடிகர் விஜயகுமார் நெகிழ்ச்சி

அஜித்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் - மூத்த நடிகர் விஜயகுமார் நெகிழ்ச்சி

அஜித்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் - மூத்த நடிகர் விஜயகுமார் நெகிழ்ச்சி
, வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (09:07 IST)
குற்றம் 23 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் அருண் விஜய்யின் தந்தையும், மூத்த நடிகருமான விஜயகுமாரும் கலந்து கொண்டார். அவர் பேசும் போது, என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யை நடிக்க வைத்து, அவரை பிரபலப்படுத்தியதற்கு அஜித்துக்கு நன்றி தெரிவித்தார்.


 
 
பல படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், ரசிகர்கள் அடையாளம் கண்டு அருண் விஜய்யை கொண்டாடியது, என்னை அறிந்தால் படத்தில்தான் அதனை விஜயகுமார் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
 
"அருண் விஜய் நடித்த படங்களில் சில வெற்றி பெற்றது. சில படங்கள் சுமாராக ஓடியது. அப்படியிருந்த போது, அவரை அழைத்து என்னை அறிந்தால் படத்தில் நடிக்க வைத்து அவரை இன்று அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு உருவாக்கியதற்காக அவரை வாழ்நாள் முழுவதும் நானும், எனது மகனும் மறக்கமாட்டோம். அதற்கு அஜித்துக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். சக நடிகனின் வளர்ச்சியை கண்டு மற்ற நடிகர் சந்தோஷப்பட வேண்டும். அதுதான் அஜித், அதுதான் தல" என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஸ்ரீப்ரியாவின் 25 வது திருமண நாள் கொண்டாட்டம்!