Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷுக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியும்; அதை நான் கொடுப்பேன்: சாயா சிங் பளிச் பேட்டி!

தனுஷுக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியும்; அதை நான் கொடுப்பேன்: சாயா சிங் பளிச் பேட்டி!

தனுஷுக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியும்; அதை நான் கொடுப்பேன்: சாயா சிங் பளிச் பேட்டி!
, திங்கள், 12 டிசம்பர் 2016 (11:41 IST)
நடிகை சாயா சிங், நடிகர் தனுஷ் இணைந்து நடித்த திரைப்படம் திருடா திருடி. பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தில் தனுஷும், சாயா சிங்கும் ஆடிய மன்மத ராசா பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.


 
 
பல வருடங்களுக்கு பின்னர் சாயா சிங், தனுஷ் கூட்டணி தற்போது அமைந்துள்ளது. தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தில் நடிக்க உள்ளார் சாயா சிங். அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டிருக்கும் இந்த படத்தில் ராஜ் கிரண், பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களோடு இயக்குனர் கவுதம் மேனன், சின்ன வயசு ராஜ்கிரணாக தனுஷே நடித்துள்ளார்.
 
இந்த படத்தில் நடிப்பதை பற்றி கூறிய சாயா சிங், தனுஷுக்கு என்ன வேண்டும் என்று எனக்கு தெரியும். அந்த நடிப்பை நான் தந்துவிடுவேன். ஒரு நடிகர் இயக்குனராகும் போது ஈசியாக நடிப்பை மற்றவர்களிடம் இருந்து வரவழைத்து விடுவார். அந்த விதத்தில் தனுஷ் சூப்பர். முதல் படம் மாதிரியே தெரியவில்லை என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்ம போத ஆகாதே டீசர் வெளியீடு - வீடியோ