Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேட்க முடியாது: சத்யராஜ் மகள் ஆவேசம்!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (10:35 IST)
ரத யாத்திரை குறித்த அறிக்கைக்கு சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் தான் கூறிய கருத்து சரிதான் என்றும், அதனால் மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை என்றும் திவ்யா சத்யராஜ் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சத்யராஜ்‌ மகள்‌ திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌. இவர்‌ கொரோனா நேரத்தில்‌ தமிழ்‌ மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ''மகிழ்மதி'' என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்‌.
 
சில வருடங்களுக்கு முன்‌ மருத்துவ துறையில்‌ நடக்கும்‌ முறைகேடுகள்‌ பற்றியும்‌ நீட்‌ தேர்வை எதிர்த்தும்‌ திவ்யா சத்யராஜ்‌ பிரதமர்‌ மோடிக்கு எழுதிய கடிதம்‌ சமூக வலைதளங்களில்‌ வைரல்‌ ஆனது. இப்பொழுது ரத யாத்திரையை அனுமதிக்க கூடாது என்று இரண்டு வாரங்களுக்கு முன்‌ வைத்த கோரிக்கைக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்‌.
 
*"கொரோனா நேரத்தில்‌ தமிழ்நாட்டில்‌ ரத யாத்திரை நடந்தால்‌ மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள்‌ இருக்கிறது. கொரோன நேரத்தில்‌ ரத யாத்திரையை அனுமதிப்பது நியாயம்‌ கிடையாது. தமிழ மக்களின்‌ உடல்‌
நலத்தின்‌ மீதும்‌ உயிர்‌ மீதும்‌ அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும்‌, தமிழ்‌ மகளாகவும்‌ ரத யாத்திரையை எதாக்கிறேன்‌. மதத்தை வளர்ப்பதில்‌ இருக்கும்‌ அக்கறை மக்களின்‌ உயிர்‌ மீதும்‌ உடல்‌ நலத்தின்‌ மீதும்‌ இல்லாதது வருத்தமாக இருக்கிறது''.
 
"ரத யாத்திரையை எதிரத்ததற்காக மன்னிப்பு கேட்கும்‌ எண்ணம்‌ இல்லை'' என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments