தொழிலில் எனக்கு நிறைய ஈகோ இருக்கிறது -விஜய் சேதுபதி!

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (15:16 IST)
நடிகர் விஜய் சேதுபதி தனக்கு நிறைய ஈகோ இருக்கிறது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். 
 
நாளை வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் படக்குழுவினர்  புரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர். அந்தவகையில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த விஜய் சேதுபதியிடம், ‘ நீங்கள், உங்கள் ரசிகர்களின் பெயர்களைக்கூட நியாபகம் வைத்திருப்பீர்கள் எனவும்  அவர்களிடம் எந்தவிதமான  ஈகோவும் பார்க்க மாட்டீர்கள் என்ற  கருத்து நிலவுகிறது. உண்மையில், உங்களிடம் ஈகோவே கிடையாதா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்குப் பதில் அளித்த நடிகர் விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது. உண்மையில் ஈகோ இல்லாத மனிதரே இருக்க முடியாது. ஈகோ இருந்தால் தான் உங்களை வளர்த்து உயரத்திற்கு கொண்டு செல்லும். அதேநேரத்தில் , ஈகோ அதிகமானால் அதை அடுத்தவர்களிடம் காட்டக்கூடாது. தொழிலில் மட்டுமே அந்த ஈகோவைக் காட்டவேண்டும்” என அவர் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments