நடிகைன்னா தொடணும்னு தப்பான நினைப்பு வருது! - நடிகை நித்யா மேனன் ஆதங்கம்!

Prasanth Karthick
ஞாயிறு, 1 ஜூன் 2025 (11:52 IST)

நடிகைகள் என்றாலே பலரும் தவறாக நடந்துக் கொள்ள முயல்வதாக நடிகை நித்யா மேனன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

தமிழில் வெப்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நித்யா மேனன். மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ள நித்யா மேனன், திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் புகழ்பெற்றுள்ளார். இதில் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்த நிலையில், அதை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் ‘இட்லி கடை’, விஜய் சேதுபதியுடன் ‘தலைவன் தலைவி’ என பல படங்களில் நடித்து வருகின்றார்.

 

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நித்யா மேனன் “பெரும்பாலான ஆண்கள் சாதாரண பெண்களிடம் நடந்துக் கொள்வது போல, நடிகைகளிடம் நடந்துக் கொள்வதில்லை. நடிகைகள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் பலரும் எங்களுக்கு கைக் கொடுக்கவும், ஒட்டிக் கொண்டும் உரசிக் கொண்டும் போட்டோ எடுக்கவும் விரும்புகின்றனர். ஆனால் சாதாரண பெண்களிடம் இதுபோன்ற செயல்களை அவர்கள் செய்வதில்லை.

 

நடிகை என்றால் ஈஸியாக தொட்டுவிடலாம் என நினைக்கிறார்கள். அப்படி சுலபமாக தொட்டுவிட நாங்கள் என்ன பொம்மைகளா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படத்தின் சிலக் காட்சிகளை இயக்கியதே வெற்றிமாறன்தானா?... தீயாய்ப் பரவும் தகவல்!

தனுஷை நம்பி 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்… அடுத்தடுத்து மூன்று படங்கள்!

23 ஆண்டுகளுக்குப் பிறகு புதுமுக இயக்குனருக்கு விக்ரம் கொடுத்த வாய்ப்பு… யார் இந்த போடி ராஜ்குமார்…?

இயக்குனருக்கு செட்டில்மெண்ட்… மகுடம் பட பிரச்சனையைத் தீர்த்த விஷால் & கோ!

எந்த அப்டேட்டும் வேண்டாம் சார்… ரஜினிக்கு நெல்சன் வைத்த கோரிக்கை… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments