Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வருடத்தில் பத்து முறை அபார்ஷனா? அதிர்ச்சி தகவல் தரும் பிரபல நடிகை

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (20:09 IST)
சமீபத்தில் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனா மீது ஒருகாலத்தில் வருடத்திற்கு பத்து முறை அபார்ஷன் செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் வந்ததாம். இந்த தகவலை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.



 


மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் அசல், தீபாவளி உள்பட பல படங்களில் நடித்த பாவனாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் அவர் ஒரு மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் தன்னுடைய ஆரம்பகட்ட திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: நான் 15 வயதிலே சினிமாவில் நடிக்க வந்தேன். நடிக்க வந்த காலத்தில் இருந்து என்னைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வருகின்றன. அதிலும் வருஷத்துக்கு குறைந்தது பத்து முறையாவது எனக்கு அபார்ஷன் பண்ணியதாக கிசுகிசுக்கப்பட்டது. அதுவும் நான் அமெரிக்கா, அலுவா, திருச்சூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று அபார்ஷன் செய்து கொண்டதாக கூறி வருகின்றனர். பட வாய்ப்புக்காக நான் பல இயக்குனர்களுடன் படுக்கையை பகிர்ந்தேனாம், கர்ப்பமானேனாம், கருவை கலைத்தேனாம். எத்தனை கிசுகிசுக்கள் வந்தன.

நான் மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசும் குணம் உள்ளவள். இதனாலேயே எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதற்காக நான் என் குணத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை’’ என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்