அந்தக் காட்சியில் நடிக்கும்போது அழுதுவிட்டேன் - விஜய் சேதுபதி பட நடிகை

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (22:02 IST)
அருவி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை அதிதிபாலன்.இவர், ஒரு காட்சியில் நடிக்கும்போது அழுதுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அருவி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் அதிதிபாலன். அதன்பின் இவர் விஜய் சேதுபதியுடன் குட்டி ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் நடித்தது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதில்,  குட்டி ஸ்டோரில் படத்தில் நீண்ட இடைவெளி விட்டு நடித்திருந்தேன். ஏனென்றால் நல்ல கதைக்காக நான் காத்திருந்தேன். 

எனக்கு வந்த கதைகளும் எனக்குப் பிடிக்கவில்லை… இந்நிலையில் நலன் குமாரசாமி கூறிய கதை எனக்குப் பிடித்திருந்தது.

அதனால் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தேன். விஜய் சேதுபதியுடன் காதல் காட்சிகளில் நடிக்கும்போது சற்று சிரமமாக இருந்தது. அப்போது நான் அழுதுவிட்டேன்

விஜய் சேதுபதி அனுபவம் மிக்கவர் என்பதால் அவரால் இயல்பாக நடிக்க முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments