Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மனைவிக்கு விருப்பம்ன்னா ஜெயிலுக்கு போகவும் தயார்: தாடி பாலாஜி

Webdunia
வியாழன், 25 மே 2017 (22:16 IST)
ஒற்றுமையாக இருந்த தாடி பாலாஜி குடும்பத்தின் மேல் யார் கண் பட்டதோ தெரியவில்லை, திடீரென கணவர் பாலாஜி மீது வன்கொடுமை புகார் கொடுத்தார் நித்யா. அதுமட்டுமின்றி உன்னை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன்' என்றும் சவால் விடுகிறாராம். இந்த நிலையில் பாலாஜி மிகவும் மனம் நொந்து என் மனைவி விரும்பினால் ஜெயிலுக்கு போகவும் தயார் என்று கூறியுள்ளார்.



 


எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது அனைத்து கணவன், மனைவிக்கும் ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனைதான். அதுகுறித்து என் மனைவி அரைமணிநேரம் தனியாக இருந்து யோசித்தால் எல்லா பிரச்னைக்கு முடிவு கிடைத்துவிடும்.  என் மனைவியுடன் இருப்பவர்கள் பணத்துக்காக அவருடன் இருக்கிறார்கள். அவர்கள் அவருக்குத் தவறான வழியைக்காட்டுகின்றனர்.

நூறுசதவிகிதம் என் மனைவியை பார்த்துக் கொண்டதைவிட என் குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். சூட்டிங் ஸ்பார்ட்டில் கூட குழந்தையை மடியில் வைத்து கொண்டு உணவு ஊட்டுவேன். அது எல்லோருக்கும் தெரியும். என் மனைவி பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருப்பதற்கு காரணம் என் குழந்தையே. என்றுமே என் மனைவியைக் குறித்து குறை சொல்லமாட்டேன்.

முதல் மனைவியை விவகாரத்து செய்தபிறகே நித்யாவை திருமணம் செய்தேன். எல்லாமும் அவருக்குத் தெரியும். என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து, ஜெயிலில் அடைக்க வேண்டும் என்பதே என் மனைவி தரப்பினரின் குறிக்கோளாக உள்ளது. என் மனைவி ஆசைப்பட்டால் அவருக்காக ஜெயிலுக்கு போகவும் நான் தயார். அதற்கு முன்பு என் மனைவி கடந்த கால வாழ்க்கையை கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேண்டும்" என்றார் கண்ணீர் மல்க.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments