''#Hukum -இது டைகரின் கட்டளை' '- 'ஜெயிலர்' பட 2 வது சிங்கில் அப்டேட்

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (19:07 IST)
‘’ஜெயிலர்’’ பட முதல் சிங்கில் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ள  நிலையில், 2 வது சிங்கில் அப்டேட் படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘’ஜெயிலர்’’. இப்படத்தில் அவருடன் இணைந்து தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் சிங்கில்  #Kaavaala சமீபத்தில்  ரிலீஸாகி  2  கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று டிரெண்டிங் ஆகி வருகிறது.

இப்பாடல் இளைஞர்கள் உள்ளிட்ட பலரையும் கவர்ந்துள்ள நிலையில், இப்பாடலை இன்ஸ்டா ரீல்ஸில் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. சினிமா நட்சத்திரங்களும் இப்பாடலுக்கு வைப் செய்து டான்ஸ் ஆடி வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சன்பிக்சர்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் சம்பவம் லோடிங்…. இன்று மாலை 6 மணிக்கு ‘’ஜெயிலர்’’ பட 2 வது சிங்கில்  பற்றிய அப்டேட்  வெளியாகும் என்று  நேற்று தெரிவித்தது.

அதன்படி,  இன்று  2வது சிங்கிலின் புரோமோவை வெளிட்யிட்டுள்ளது படக்குழு. அதில், வில்லன்களை ரஜினியின் பின்னால் நின்று கொண்டிருக்க, அவர் #Hukum டைகரின் கட்டளை என்று கூறுகின்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் பட 2 வது சிங்கில் வரும் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என்று  படக்குழு தெரிவித்துள்ளது.  இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி-அல்லு அர்ஜுன் படத்துக்காக சாய் அப்யங்கர் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா?

‘மகுடம்’ இயக்குனரைக் காக்கவைத்து அவமானப்படுத்திய விஷால்…!

டியூட் படத்தின் அதிரி புதிரி ஹிட்… மீண்டும் இணையும் ப்ரதீப் & மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட்டம்… அவமானப்படுத்திய நபர்… சூரி கொடுத்த ‘நச்’ பதில்!

நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினர்… சமந்தா வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments