Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த்ரிஷ்யத்துக்கு புது நிறத்தை தந்திருக்கிறார் கமல் - மீனா பாராட்டு

த்ரிஷ்யத்துக்கு புது நிறத்தை தந்திருக்கிறார் கமல் - மீனா பாராட்டு
, செவ்வாய், 7 ஜூலை 2015 (10:10 IST)
பாபநாசம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யத்தின் ரீமேக் என்பதால், கமல் மற்றும் மோகன்லாலின் நடிப்பை ஒப்பிட்டு இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

த்ரிஷ்யம் மற்றும் அதன் தெலுங்கு ரீமேக்கில் நடித்தவர் மீனா. அவர் பாபநாசம் படத்தைப் பார்த்துவிட்டு கமலையும், மீனா நடித்த வேடத்தை தமிழில் செய்திருக்கும் கௌதமியையும் பாராட்டியுள்ளார்.
"த்ரிஷ்யத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நன்றாக நடித்திருக்கிறார். குறிப்பாக நெல்லை தமிழில் பேசி படத்துக்கு புது நிறத்தை தந்திருக்கிறார். கௌதமியும் ரொம்ப நன்றாக நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே நான் கௌதமி வேடத்தில் நடித்து இருக்கிறேன். கௌதமி கேரக்டரில் நிறைய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழுக்கு ஏற்ற மாதிரி ரொம்ப அழகாக நடித்து இருக்கிறார்" என மீனா கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil