Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சைகளைக் கிளப்பிய ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால்!

vinoth
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (07:52 IST)
கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸான ஹாட்ஸ்பாட் திரைப்படம் திரையரங்கில் அதிகளவில் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனாலும் அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் எமோஷனலாக பேசி ரசிகர்களை உள்ளே வரவைக்க பார்த்தார். படம் பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் தன்னை செருப்பால் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்றார்.

ஆனாலும் அந்த படம் வெற்றி பெறவில்லை. ஆனால் அதன் பிறகு ஓடிடியில் ரிலீஸான போது ‘ஹாட்ஸ்பாட்’ பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் நல்ல  வரவேற்பைக் குவித்தது. படத்தில் சொல்லப்பட்ட நான்கு கதைகளிலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மதிப்பீடுகளைக் கொடுத்திருந்தார் இயக்குனர். ஆனால் அந்த அதிர்ச்சி மதிப்பீடுகளைத் தாண்டி கதை உள்ளீடற்றதாகவும், பிரச்சாரத் தனம் கொண்ட உருவாக்கமாகவும் இருந்தது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்க, இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது சம்மந்தமான ப்ரமோஷன் ஒன்றை படக்குழு வெளியிட அது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

இளையராஜா எதிர்பார்ப்பது பணம் அல்ல… இயக்குனர் சி எஸ் அமுதன் ஆதங்கம்!

ஆறாவது நாளில் குறைந்த அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வசூல்!

குட் பேட் அக்லி பெரிய வசூல் பண்ணாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் – பிரபலம் கருத்து!

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments