Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
வியாழன், 3 ஏப்ரல் 2025 (14:25 IST)
ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ என்ற வெப் தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது என்பதும், இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஒரு மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்கள், தாய் மற்றும் மகள் இடையே நடக்கும் போராட்டம், தந்தை மற்றும் மகன் இடையே நடக்கும் பாசப் போராட்டம், இதனிடையே ஒரு காதல் சம்பவம் என இந்த தொடர் நல்ல வரவேற்பு பெற்றது.
 
இந்த நிலையில், இந்த தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை ஜியோ ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் இந்த தொடரை டெலிட் பாக்டரி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாகவும், இந்த தொடரின் ஒளிபரப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதனை அடுத்து, ரசிகர்கள் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments