Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாக்யராஜை கௌரவிக்கும் கோடிட்ட இடங்களை நிரப்புக பாடல்கள் வெளியீட்டுவிழா

பாக்யராஜை கௌரவிக்கும் கோடிட்ட இடங்களை நிரப்புக பாடல்கள் வெளியீட்டுவிழா
, வியாழன், 24 நவம்பர் 2016 (14:47 IST)
டிசம்பர் 4 பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா. இதனை தனது குருநாதர் பாக்யராஜை கௌரவிக்கும் விழாவாக எடுக்கவுள்ளார் பார்த்திபன்.

 
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். தனது குருவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவரது மகனை தனது படத்தில் நாயகனாக்கியதாக பார்த்திபன் கூறியிருந்தார். அவர் மகன் மூலம் அது தனது குருவை அடையும் என்பது அவரது எண்ணம்.
 
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் பாடல்கள் வெளியீட்டை பாகய்ராஜை கௌரவிக்கும் விழாவாக எடுக்க பார்த்திபன் முடிவு செய்துள்ளார். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்து படம் இயக்கியவர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துக்கு நான்தான் வில்லன் - விவேக் ஓபராய்