Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிராஜின் ஜாக்சன் துரை - ஹாலிவுட் நடிகர் நடிக்கிறார்

Webdunia
வியாழன், 21 மே 2015 (15:58 IST)
சிபிராஜ் தற்போது நடித்து வரும் படம், ஜாக்சன் துரை. பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கம். 
 
இதுவொரு பேய் படம். வழக்கமான பேய் படமாக இல்லாமல் சரித்திரகால பேய் படமாக எடுக்கிறார்கள். அந்தவகையில் இது தமிழுக்கு முதல் படம். நேற்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
சிபியின் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் விநியோக உரிமையை வாங்கிய ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. நாயகி பிந்து மாதவி. சத்யராஜ், கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
 
முக்கியமாக, ஹாலிவுட் நடிகர் ஷாசெரி பிரதான வேடத்தில் நடிக்க உள்ளார். 1940 -களில் நடக்கும் கதை. தமிழின் முதல் பீரியாடிகல் பேய் படமான ஜாக்சன் துரை ரசிகர்களை கவரும் என இயக்குனர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments