Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''என் கடைசிப் படம் இதுதான்'' - உதயநிதி ஸ்டாலின்' ஓபன் டாக்'

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (18:50 IST)
தமிழ் சினிமாவில்  நடிகர் மற்றும் தயாரிப்பாளராக உதய நிதி ஸ்டாலின் இவர் சில ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

அதன் பின், கதிரேசன், நண்பேன்டா,கெத்து, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களின் நடித்ததுடன், பல படங்களை தயாரிக்கவும், அதை தன் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் வி நியோகமும் செய்து வருகிறார்.

இவர் தற்போது நடித்துள்ள  படம் கலகத் தலைவன். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும்    நவம்பர் 18 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இப்படம் குறித்து, பிரபல  நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள  உதய நிதி, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம்தான் தன் கடைசிப் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் கதையை அவர் இன்னும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரெட் ஜெயிண்ட் தயாரிப்பில் கமலின் இந்தியன்-2 தயாராகி வருகிறது. அஜித்தின் துணிவு படத்தையும் இந்த நிறுவனம்தான் வெளியிடுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments