தெலுங்கு படத்துக்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் ஆதி!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:56 IST)
நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி இப்போது தெலுங்கில் உருவாகி வரும் ஏஜெண்ட் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் இப்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகும் புதிய படமான ஏஜெண்ட்டை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். அந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் வேடத்தில் நடிக்க மோகன் லால் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் மறுத்துவிடவே இப்போது மம்மூட்டியுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு இசையமைக்க தமிழ் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இவர் ஏற்கனவே தனி ஒருவன் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான துருவாவுக்கு இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments