Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா: டேஞ்சர் பகுதியாக ராயபுரம், தப்பித்த மணலி!

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (09:26 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்தபோதிலும் கடந்த சில நாட்களாக சென்னை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் ஓரளவுக்கு கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் தான் புதிய கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றது. நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 104 பேர்களில் சென்னையை தவிர பிற பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் 10 பேர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் எந்தெந்த பகுதியில் அதிக பாதிப்பு என்பது குறித்த மண்டலவாரிய பட்டியலை சென்னை மாநகராட்சி சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி மண்டலவாரியமாக சென்னை ராயபுரம் பகுதியில் தான் மிக அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ளது. 
 
ராயபுரத்தில் 189 பேர்களுக்கும், தேனாம்பேட்டையில் 85 பேர்களுக்கும், தண்டையார்பேட்டையில் 77 பேர்களுக்கும், கோடம்பாக்கத்தில் 63 பேர்களுக்கும், வளசரவாக்கத்தில் 30 பேர்களுக்கும், அடையாறு பகுதியில் 19 பேர்களுக்கும், திருவொற்றியூரில் 17 பேர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மற்றும் சோழிங்கநல்லூரில் மிகவும் குறைந்தபட்சமாக ஒன்று மட்டும் இருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments