Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம் பார்க்கிங்… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (17:04 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. 

இப்போது அவர் டீசல், நூறு கோடி வானவில், எல் ஜி எம் என ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது புதிதாக அவர் நடிக்கும் பார்க்கிங் என்ற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்கின்றார். சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். படத்தின் ஷூட்டிங் இப்போது சென்னையில் நடந்து வருகிறது. இன்று படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!

மாஸ் மகாராஜா பாலய்யா is Back… எப்படி இருக்கு அகாண்டா 2 டீசர்?

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

மல்டி ஸ்டார் படமாக மாறும் பென்ஸ்… முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தம்!

ரஜினிக்காக முதல் முறையாக குரல் கொடுக்கும் டி ராஜேந்தர்… கூலி பட பாடல் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments