Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா. ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (08:13 IST)
பா ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தில் மெட்ராஸ் மற்றும் ஆடுகளம் ஆகியப் படங்களில் நடித்த் ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பா ரஞ்சித் தனது முதல் படமான அட்டகத்தி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின் மெட்ராஸ், கபாலி மற்றும் காலா என அவர் இயக்கியப் படங்களின் பேசுபொருளின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறினார். வரிசையாக ரஜினியை வைத்து இரண்டு படங்களை இயக்கியதால் இந்திய அளவில் புகழடைந்த ரஞ்சித் அடுத்ததாக ஹிந்தியில் பிர்சா முண்டா என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

இதற்கிடையில் பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகியத் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இதையடுத்து அடுத்ததாக ஒருப் படம் தயாரிக்கும் முனைப்பிலும் உள்ளார். அந்தப் படத்தில் மெட்ராஸ் படத்தில் ஜானி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஹரிகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments