Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறன், விஜய்சேதுபதி, பாண்டிராஜ் குறித்து ஹர்பஜன்சிங் டுவிட்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (07:22 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் லாஸ்லியா உடன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் 8 நிமிட வீடியோவை வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் பாண்டிராஜ் ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை அடுத்து மூவருக்கும் நன்றி கூறி நடிகரும், கிரிக்கெட் வீரருமான அரசின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது
 
தோல்வியே பாக்காத மனிதன் உலகத்துல இல்லைனு சொல்லுவாங்க.அந்த சரித்திரத்தை மாத்தி எழுதுன சக்தி @VetriMaaran சார் தான்.தோல்வியே உங்கள் வாழ்வில் இல்லை என்பதால் தான் நீங்கள் பிறந்தவுடனே உங்களுக்கு வெற்றிமாறன் என்று பெயர்சூட்டினார்களா சார்? திரையுலக அர்ஜுனன் அவர்களுக்கு நன்றி!
 
சேது ஜி @VijaySethuOffl ரொம்ப நன்றி."ஒரு வாரத்துக்கு 3 படம் கொடுக்கும் நீங்கள் ஓய்வு என்னும் வார்த்தையை உதறிய சினிமா துறவி". உங்கள் உழைப்பு! முயற்சி! ஆளுமை! மனிதர்களை மதிக்கும் குணம்! தலைகனம் இல்லா பண்பு! எல்லாம் தாரு மாரு.நடிப்பு அரக்கன்னா சும்மாவா.பஜ்ஜி ஹாப்பி அண்ணாச்சி!
 
சாலமன் பாப்பையா ஐயா குடும்பங்கள் ஒற்றுமையா இருக்க காரணம் ஆண்களா?பெண்களா? அப்பிடினு பட்டிமன்றம் நடத்துனா இயக்குனர் பாண்டிராஜா? அப்பிடினு இன்னுமொரு ஆப்ஷன் குடுக்கணும்.அந்த அளவுக்கு உறவுகளோட அருமை பெருமை எடுத்துகாற்ற @pandiraj_dir சார் அவர்களுக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும் !
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments