Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் ஸ்டைலில் கமலுக்கு வாழ்த்து! – தமிழ்புலவர் ஹர்பஜன் ட்வீட்!

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (11:36 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ஸ்டைலிலேயே வாழ்த்து தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் உலகம் முழுவதும் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி சினிமா பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரும், ரசிகர்களால் தமிழ் புலவர் என செல்லமாக அழைக்கப்படுபவருமான ஹர்பஜன் சிங் கமல்ஹாசனுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவுகளில் கோர்வையான, புதிரான வார்த்தைகளை உபயோகிப்பார். பலர் அவர் பதிவு புரியாமல் குழம்பி போவதும் உண்டு. அதே பாணியில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங்

”சினிமா என்னும் துறவை
 துரத்தி சிறகு செதுக்கிய பறவை
உங்கள் அறுபத்து ஐந்து அகவை
எமக்கு விஸ்வரூப உவகை.
களிப்புற்றோம் காணீர்!
காலம் இருக்கட்டும் உம் பெயர் சொல்லி!

கமல் சார் உங்களுக்கு உங்கள் தொனியில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் அண்ணா என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக ஹர்பஜன் சிங்கின் தமிழ் ட்வீட்டுகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ள நிலையில் இந்த பதிவும் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments