Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவிலுக்கு ரூ.2.66 கோடி நன்கொடையாக வழங்கிய ஹனு-மான் படக்குழு!

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (17:33 IST)
சமீபத்தில் வெளியாகி தியேட்டரில் ஓடி வரும் படம் ஹனு-மான். இப்படத்தில் டிக்கெட்டில் இருந்து திரட்டிய ரூ.2.66 கோடியை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்குவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவான படம் ஹனு-மான்.  இப்படத்தில் தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடித்துள்ளளார். அவருக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து, வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம்  கடந்தாண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் பொங்கல் பண்டிகையயொட்டி கடந்த 12 ஆம் தேதி  தியேட்டரில் ரிலீஸானது.

இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியின்போது, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஹனு-மான் படத்தில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் 5 ரூபாயை கோவிலுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, இப்படத்திற்கு தற்போது வரை விற்பனையான  53,28,211 டிக்கெட்டுகளில் இருந்தும் ரூ. 5 ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் கிடைத்த ரூ.2.66 கோடியை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்குவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments