Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 ஆண்டு பழமையான அரண்மனையில் திருமணம் செய்யப்போகும் ஹன்சிகா… வெளியான தகவல்!

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (19:32 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வந்தார். அந்த படம் முடிந்த நிலையில் அவர் கைவசம் வேறுபடங்கள் இல்லை என்றானது.

இந்நிலையில் விரைவில் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவரை கரம்பிடிக்க உள்ள மாப்பிள்ளை ஒரு அரசியல் பிரபலமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் உள்ள 400 ஆண்டுகால பழமையான அரண்மனை ஒன்றில்தான் ஹன்சிகாவின் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் மாதம் இந்த திருமணம் நடக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments