Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடி ஜோ‌திடரை தேடும் ஹன்சிகா

நாடி ஜோ‌திடரை தேடும் ஹன்சிகா
, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (15:36 IST)
சாகிற நாள் தெரிந்தால் வாழ்கிற நாள் நரகமாயிடும் என்று சூப்பர் ஸ்டார் சொன்னதை யார் கேட்கிறார்கள்? எல்லோருக்கும் தங்களின் எதிர்காலத்தை அறிந்து கொள்ள ஆசை. புகழின் உச்சியில் இருக்கும் நடிகை ஹன்சிகாவுக்கும் அதுதான் லட்சியம் என்றால் என்ன செய்வது?


 
 
சின்ன வயதில் ஏதோ ஜோ‌திடர், நீங்க ஆஹா ஓஹோவென்று இருப்பீர்கள் என்றிருக்கிறார். அது பலித்துவிட்டதால் இப்போது தனது எதிர்காலத்தை மேலும் துல்லியமாக அறிந்து கொள்ள துடிக்கிறார்.
 
நாடி ஜோ‌திடத்தில் முக்காலத்தையும் கணித்து கூறுகிறார்கள் என்று யாரோ ஹன்சிகாவிடம் தெரிவிக்க, அப்போதிருந்து நல்ல நாடி ஜோ‌திடராக தேடி வருகிறார். நீங்கள் நல்ல நாடி ஜோ‌திடராக இருந்தாலோ அல்லது நாடி ஜோ‌திடரை தெரிந்து வைத்திருந்தாலோ... ஹன்சிகாவுக்கு உதவலாம்.

Share this Story:

Follow Webdunia tamil