Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டன… வலிமை பற்றி இயக்குனர் ஹெச் வினோத் டிவீட்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (09:35 IST)
வலிமை படத்தின் அப்டேட் ஒன்று இப்போது இயக்குனர் ஹெச் வினோத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக போனி கபூரை கேலி செய்யும் விதமாக சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதும், அரசியல் மேடைகள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் வலிமை அப்டேட் கேட்பது என அஜித் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் சுற்றி வந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் ஹெச் வினோத் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘வலிமை படத்தின் அனைத்து வியாபாரங்களும், வெளிநாடு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையும் விற்பனை செய்யப்பட்டு விட்டது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments