Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட தயாரிப்பாளருக்கு அடுத்து படம் இயக்கும் ஹெச் வினோத்!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (09:51 IST)
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது தன்னுடைய 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் படி விஜய் சேதுபதியை வினோத் தனது அடுத்த படத்தில் இயக்க உள்ளாராம்.

ஏற்கனவே இது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியும் தான் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் வெற்றி பெறாததால் எப்படியாவது ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் 61 படத்தின் ஷூட்டிங் முடிந்த உடனேயே இந்த படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments