Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது வலிமை முதல் கட்ட படப்பிடிப்பு – சென்னை திரும்பியது படக்குழு !

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (15:19 IST)
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் முடித்துள்ள படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பின் அஜித்- போனி கபூர் – ஹெச் வினோத் கூட்டணி மீண்டும் வலிமை படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தில் அஜித் காவலராக நடிப்பதாக சொல்லப்படுகிறது. அஜித்தை தவிட வேறு யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகாமல் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில் 13 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் முக்கியமான சண்டைக்காட்சிகளை எடுத்துள்ள படக்குழு இப்போது சென்னைத் திரும்பியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments