Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்தப் படத்தை என் மனைவி பார்க்கலை

அந்தப் படத்தை என் மனைவி பார்க்கலை
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (14:37 IST)
தயாரிப்பாளர்களின் புதிய டார்லிங், ஜீ.வி.பிரகாஷ். டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா என இவர் நடித்த இரு படங்களுமே ஹிட்.


 


அதிலும் த்ரிஷா இல்லனா நயன்தாராவின் வெற்றிக்குப் பிறகு, கெட்ட பய சார் இந்த ஹீரோ என்பது மாதிரியே கதை சொல்கிறார்கள் ஜீ.வி.யிடம். அவர் நடிக்கிற அடுத்தப் படத்தின் பெயர், கைப்புள்ள.
 
விமர்சகர்களும், பொதுமக்களும் கழுவி ஊற்றிய, த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை உங்கள் குடும்பம் பார்த்ததா என்று ஜீ.வி.யிடம் பிரபல ஆங்கித நாளிதழ் கேட்டிருந்தது.
 
அதற்கு அவர், என் மனைவியோ மற்றவர்களோ அந்தப் படத்தைப் பார்க்கவில்லை, பார்க்கும்படி நான் அவர்களை வற்புறுத்துவது இல்லை என்று பதிலளித்திருந்தார். 
 
அதானே, கண்டிப்பாகப் பார்க்க அது என்ன சங்காராபரணமா?

Share this Story:

Follow Webdunia tamil