Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டில் ஹிரோவாக அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ்?

Sinoj
செவ்வாய், 19 மார்ச் 2024 (15:30 IST)
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில்  உருவாகவுள்ள புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார். இவர், வெயில், அங்காடி தெரு, பொல்லாதவன், காளை, குசேலன், அசுரன், சூரரைப் போற்று., தலைவா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
 
இவர், சினிமாவில் இசையமைப்பது மட்டுமின்றி  நடிகராகவும், டார்லிங், திரிஷா இல்லனா  நயன்தாரா, பென்சில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
 
தற்போது அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் ரெபெல். இப்படத்தின் ஹீரோவாக ஜிவி.பிரகாஷ்குமார் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மமிதா பைஜூ, வெங்கடேஷ் விபி. ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை   ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி வைரலானது
 
இந்த  நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில்  உருவாகவுள்ள புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், இது இந்தி மற்றும் தமிழில் தயாராகவுள்ளதாகவும் இதுகுறித்து விரைவில் அறிவிக்கபடும் என தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்திய கியாரா அத்வானி!

சூர்யா கார்த்திக் சுப்பராஜ் படத்தின் கதாநாயகி இவர்தான்…!

தக் லைஃப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments