Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இன்னும் Student'ஆவே இருக்கேன் - குட்டி ஜானு வேதனை பதிவு!

Webdunia
வியாழன், 28 மே 2020 (18:00 IST)
விஜய் சேதுபதி , த்ரிஷா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான 96 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வழக்கமான மசாலா அம்சங்கள் எதுவும் இல்லாமல் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, சிறுவயது ராம் ஜானுவாக நடித்த ஆதித்யா மற்றும் கௌரியின் நடிப்பும் ஆகும்.

இப்படம் ரிலிசாகி 100 நாட்களைக் கடந்தும் இன்னமும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் 96 படக் காதல் காட்சிகளின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதனையடுத்து சிறுவயது ஜானுவாக நடித்த கௌரி தொடர்ந்து Margamkali என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். கூடவே நிறைய குறும்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் கொரோனா ஊரடங்கினால் பள்ளி , கல்லூரி உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதால் தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வு எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம் என்ற அச்சத்தில் மாணவர்கள் தொடர்ந்து படித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கௌரி கிஷன் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருக்கும் போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு "நான் இன்னும் Student'ஆவே இருக்கிறேன். மூலையைச் சுற்றி செமஸ்டர் தான் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments