Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியை இயக்க தயாராகி வரும் குட்னைட் மணிகண்டன்!

vinoth
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (07:33 IST)
கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மணிகண்டன் நடிகராக மட்டும் இல்லாமல், திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். விக்ரம் வேதா உள்ளிட்ட சில படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ள அவர் இப்போது விஜய் சேதுபதியை வைத்து திரைப்படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறாராம்.

அதற்காக திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், அதற்காக நடிக்க வரும் சில வாய்ப்புகளையும் இப்போது ஏற்க மறுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments