Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தில் இடம்பெற்ற விஜயகாந்த்… குடும்பத்தினருக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கப்பட்டது?

vinoth
சனி, 31 ஆகஸ்ட் 2024 (11:39 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் செயற்கை நுண்ணறிவு உருவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக சமீபத்தில் படக்குழுவினர் விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது விஜயகாந்தை படத்தில் பயன்படுத்திக் கொண்டதற்காக 50 லட்ச ரூபாய் ஊதியமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments