லியோ முதல் நாள் வசூலை கோட் முந்த வாய்ப்பில்லையா…? பின்னணி என்ன?

vinoth
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (09:40 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

நேற்று முதல் காட்சி ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்று வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நேற்று படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இதனால் கோட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

விஜய் நடித்த படமான லியோ முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதை கோட் முறியடிக்கும் என ரிலீஸூக்கு முன்னர் பலரும் தெரிவித்து வந்தனர். ஆனால் ரிலீஸுக்குப் பிறகு அந்த நிலை மாறியது. முதல் நாளிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளது. மேலும் வட இந்தியா மல்ட்டி ப்ளக்ஸ்களில் இந்த படம் ரிலீஸாகவில்லை. அதனால் லியோ முதல் நாள் வசூலை கோட் திரைப்படம் முந்த வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட புரோமோஷனுக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு? பிக்பாஸ் வீட்டில் கீர்த்தியின் மைண்ட் வாய்ஸ்

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

தொடர் சர்ச்சையாகும் பேச்சு.. தேவயானியின் கணவருக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments