Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஓப்பனாக சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

vinoth
திங்கள், 24 ஜூன் 2024 (16:14 IST)
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் ஒரு விஜய்யின் தோற்றம் மிகவும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திடம் டி ஏஜிங் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதால் படத்தின் அப்டேட்களைக் கொடுத்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.

மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய் என்று நிர்வாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் தயாரித்ததிலேயே இதுதான் அதிகபட்ச படம் என்று கூறியுள்ள, விஜய் போன்ற ஸ்டார் இருப்பதால் இந்த பட்ஜெட்டை தாண்டியும் எங்களுக்கு லாபம் வரும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாயகன் படத்தில் கிடைத்த சிறு பொறிதான் ‘தக் லைஃப்’.. மணிரத்னம் பகிர்வு!

அப்துல் கலாம் பயோபிக் படமான ‘கலாம்’-ல் கதாநாயகனாக தனுஷ்… கேன்ஸ் விழாவில் வெளியான முதல் லுக் போஸ்டர்!

முள்ளும் மலரும் படத்தில் நானும் ரஜினியும் இணைந்து நடிக்க வேண்டியது… பல வருடங்கள் கழித்து கமல் பகிர்ந்த தகவல்!

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments