Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா படம் 2000 கோடி ரூபாய் வசூலிக்கும்… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதீத நம்பிக்கை!

vinoth
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (08:03 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ரிலீஸாகி இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் படம் குறித்து பேசிவரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் பற்றி அதீத நம்பிக்கையில் பேசி வருகிறார். அதன் ஒரு கட்டமாக படம் 2000 கோடி ருபாய்க்கு மேல் வசூலிக்கும் என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். இதுவரை இந்தியாவில் உருவான படங்களில் 2000 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்த படம் என்றால் அது டங்கல் மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள்தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 45வது படம்: ’ இயக்குனர் , இசையமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அரசியல் உள்பட எந்த வியாதியும் எனக்கு இல்லை: வதந்திக்கு விளக்கம் அளித்த எஸ்வி சேகர்..!

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ராணுவப் பின்னணியில் உருவாகும் திரைப்படம் 'பரிசு'

மாடர்ன் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments