Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (18:10 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் படத்துக்கு ஏழுகடல் ஏழு மலை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். யுவன் இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

சமீபத்தில் படத்தின் டைட்டில் ஏழுகடல் ஏழுமலை என்று அறிவிக்கப்பட்டு கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இது ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், ஏழு கடல் ஏழு மலை படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.   நிவின் பாலியுடன் சூரி ரயிலில் செல்லும்போது, நிவின் பாலி, உனது வயது என்ன கேள்வி கேட்கிறார். இதற்கு சூரி தனக்கு 32 என்று கூறவே, தனக்கு வயது 8822 என்று கூறுகிறார்.

நான் சொன்னால் நீங்க நம்பமாட்டீங்க ஆனால் நான் சொன்னதெல்லாம் நிஜம் என்று அஞ்சலியிடம் நிவின் பாலி கூறும் வசனங்களும் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு நிதியுதவி செய்த நடிகர் சிம்பு! எத்தனை லட்சம் தெரியுமா?

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

அடுத்த கட்டுரையில்
Show comments